September 5, 2026

கல்வி சார்ந்த 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தொடர் மிதிவண்டி பயணம்: பேராசிரியர் ஜவஹர் நேசன் தகவல்

சென்னை: கல்வி சார்ந்த 5 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, கன்​னி​யாகுமரி​யில் இருந்து சென்னை வரை 25 நாட்​கள் தொடர் மிதிவண்டி பயணம் மேற்​கொள்​ளவுள்​ள​தாக பேராசிரியர் ஜவஹர் நேசன் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை பத்​திரி​கை​யாளர் மன்​றத்​தில் குழந்​தைகள் மற்​றும் இளைஞர்​களின் வாழ்க்கை முக்​கி​யம் என்ற இயக்​கத்​தின் சார்​பில் 21-ம் நூற்​றாண்​டுக்​கான கல்வி அறிக்​கையை இயக்​கத்​தின் ஒருங்​கிணைப்​பாளர் பேராசிரியர் ஜவஹர் நேசன் நேற்று வெளி​யிட்டு கூறிய​தாவது: குழந்​தைகள், இளைஞர்​களின் வாழ்க்கை நலனுக்​காக 5 முக்​கிய கோரிக்​கைகளை நடை​முறைப்​படுத்த வேண்​டும்.

எங்​கள் இயக்​கத்​தின் முக்​கிய கோரிக்​கைகளாக நீட் தேர்வை முற்​றி​லு​மாக ஒழிக்க வேண்​டும், அதிக அழுத்​தம் தரும், பயிற்சி மையங்​களைச் சார்ந்த மாணவர் தேர்வு முறைக்​குப் பதிலாக, மருத்​து​வக் கல்விக்​கான நியாய​மான, அனை​வரை​யும் உள்​ளடக்​கிய முறையை கொண்​டுவர வேண்​டும்.

தேசிய கல்விக்​கொள்கை 2020-ஐ நிராகரிக்க வேண்​டும், அறி​வியல், ஜனநாயகம் மற்​றும் சமூக, மக்​கள்​தொகை மற்​றும் உலகளா​விய தேவை​களுக்​குப் பொருத்​த​மான கல்​வியை பாது​காக்க வேண்​டும்.

கல்​வியை மீண்​டும் மாநிலப் பட்​டியலுக்​குக் கொண்​டுவர வேண்​டும், தங்​களது சமூக மற்​றும் பண்​பாட்​டுப் பன்​முகத்​தன்​மைக்கு மிக நெருக்​க​மாக உள்ள மாநிலங்​களே கல்வி அமைப்​பை​யும் கல்விக் கொள்​கை​யை​யும் கட்​டுப்​படுத்த வேண்​டும்.

நீதி​சார் பொதுக் கல்​வியை வலுப்​படுத்த வேண்​டும், வறுமை அல்​லது சமூகப் பின்​னணி காரண​மாக எந்​தக் குழந்​தை​யும் தரமான கல்​வியை இழக்​காத வகை​யில் பொதுக் கல்விக்​கான அரசின் முதலீட்​டைத் தொடர்ந்து வலுப்​படுத்த வேண்​டும்.

சமூகப் போதனை​யின் அடிப்​படை​யில் கல்​வியை உரு​வாக்​கி, செயற்​பாட்டு மனிதநே​யத்தை நோக்​கிச் செல்ல வேண்​டும். விமர்சன ரீதி​யாகச் சிந்​திக்​கும், பாரபட்​சங்​களை எதிர்க்​கும், சமூகத்​தைப் புரிந்​து​கொள்​ளும், உண்​மை​யைத் தேடும் மற்​றும் தனது வாழ்க்​கை​யைத் தானே வழிநடத்​தும் ஆற்​றல் கொண்ட மாணவர்​களை உரு​வாக்க வேண்​டும்.

இந்த கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, கன்​னி​யாகுமரி​யில் இருந்து சென்னை வரை இளைஞர்​கள், பெற்​றோர்​கள் மற்​றும் கல்​வி​யாளர்​களு​டன் 25 நாட்​கள் தொடர் மிதிவண்டி பயணம் மேற்​கொள்ள இருக்​கின்​றோம். வழி​யில் மக்​களிடம் விழிப்​புணர்வு பிரச்​சா​ரங்​களை ஏற்​படுத்​தி, மக்​களின் ஒத்​துழைப்​புடன் இந்த 5 கோரிக்​கைகளை நாம் முன்​னெடுத்து செல்ல இருக்​கிறோம்.

இறு​தி​யில் சென்னை வந்து அடை​யும் போது, ஒரு மிகப்​பெரிய மாநாட்​டின் மூல​மாக இந்​திய தேசத்​துக்கு ஒரு அறை​கூவல் விடுக்​கப்​படும். அந்த அறை​கூவல் இந்த கோரிக்​கையை வென்​றெடுக்​கக்​கூடிய ஒன்​றாக இருக்​கும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Spread the love