November 19, 2026

கார்த்திகை பரிவர்த்தனை யோகம்: அதிர்ஷ்டம் பெறும் 6 ராசிகள்

நவம்பர் 17ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசியில் நுழைவதுடன் கார்த்திகை மாதம் பிறக்கிறது. அதே சமயம் விருச்சிக ராசி அதிபதியான செவ்வாய் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசி அதிபதி சூரியனும், விருச்சிக ராசி அதிபதி செவ்வாயும் ராசிகளை மாற்றி அமர்வதால் பரிவர்த்தனை யோகம் உருவாகிறது. இதனால் வேலை, தொழில், நிதி மற்றும் குடும்பத்தில் சாதகமான பலன்களைப் பெறும் ராசிகளைப் பார்ப்போம்.

ரிஷபம்

சூரியன் மற்றும் செவ்வாயின் தாக்கத்தால் பணியிடத்தில் நல்ல வாய்ப்புகளும் மரியாதையும் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவும் புகழும் அதிகரிக்கும். திறமைக்கு அங்கீகாரமும் வருமான உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கௌரவமும் அந்தஸ்தும் உயரும்.

கடகம்

சூரியன் ஐந்தாம் இடத்திலும், செவ்வாய் தன ஸ்தானத்திலும் இருப்பதால் நிதி சார்ந்த சாதகமான பலன்கள் ஏற்படும். குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் தைரியம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பங்குச்சந்தை மற்றும் வணிக முதலீடுகள் லாபம் தரக்கூடும். செல்வாக்கு மிக்கவர்களின் அறிமுகத்தால் புதிய வாய்ப்புகளும், சிலருக்குப் பதவி உயர்வு தொடர்பான நல்ல செய்திகளும் கிடைக்கும்.

சிம்மம்

பரிவர்த்தனை யோகத்தால் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பணியிடத்தில் தலைமைத்துவத் திறனை வெளிப்படுத்த முடியும். குடும்பம் மற்றும் சொத்து விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

துலாம்

தன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நிதிநிலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் மற்றும் குடும்பத் தேவைகளை எளிதாகச் சமாளிக்க முடியும். வருமானம் அதிகரிப்பதால் நிலம், வாகனம், சொத்து வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். பணியிடத்தில் பதவி உயர்வும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

விருச்சிகம்

சூரியனின் சஞ்சாரத்தால் தைரியமும் செல்வாக்கும் உயரும். சமூகப் பணிகளில் மரியாதை அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தித்துச் செயல்படும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் பணியிடத்தில் பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.

கும்பம்

கார்த்திகை மாதத்தில் தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். செவ்வாய் ஏழாம் இடத்திலும், சூரியன் பத்தாம் இடத்திலும் இருப்பதால் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும். தொழில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். அரசியலில் இருப்பவர்களுக்குப் புகழும் புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். பெரிய முயற்சிகளை மேற்கொள்ள ஏற்ற மாதமாக அமையும்.

குறிப்பு: இத்தகவல்கள் ஜோதிட சாஸ்திரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை

Spread the love