May 24, 2026

காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு

சென்னை: சென்​னை​யின் 112-வது காவல் ஆணை​ய​ராக ஏ.அமல்​ராஜ் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார். தமிழகத்​தில் விஜய் தலை​மையி​லான புதிய அரசு அமைந்த பிறகு நிர்​வாக வசதிக்​காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் இடமாற்​றம் செய்​யப்​பட்டு வரு​கின்​றனர்.

மேலும் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களி​லும் புதிய நியமனங்​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. இதன் தொடர்ச்​சி​யாக, சென்னை காவல் ஆணை​ய​ராக இருந்த அபின் தினேஷ் மோடக் நேற்று முன்​தினம் மாற்​றப்​பட்​டு, சிபிசிஐடி பிரிவு கூடு​தல் டிஜிபி-​யாக அவர் நியமிக்​கப்​பட்​டார்.

சென்​னை​யின் புதிய காவல் ஆணை​ய​ராக ஏ.அமல்​ராஜ் நியமிக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில் அவர் சென்னை வேப்​பேரி​யில் உள்ள காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று காலை பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

அவருக்கு கூடு​தல் காவல் ஆணை​யர்​கள் கார்த்​தி​கேயன் (போக்​கு​வரத்​து), ராதிகா (மத்​திய குற்​றப்​பிரிவு), நரேந்​திரன் நாயர் (தெற்​கு), பிர​வேஷ் குமார் (வடக்​கு), நுண்​ணறி​வுப் பிரிவு துணை ஆணை​யர்​கள் ராமமூர்த்​தி, சக்​திவேல் உள்​ளிட்ட அதி​காரி​கள் வாழ்த்து தெரி​வித்​தனர்.

தொடர்ந்து அவர் முதல்​வர் விஜய்​-யை தலை​மைச் செயல​கம் சென்று சந்​தித்து வாழ்த்து பெற்​றார். டிஜிபி அலு​வல​கம் சென்று டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோரை சந்​தித்​தார்.

Spread the love