இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, அவசர மருத்துவ சேவைக்காக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் சுகாதார நிலையத்திற்கான சாலையை உடனடியாக சீரமைக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் சுகாதார நிலையத்தை அணுகுவதற்குத் தேவையான நடைபாதை மற்றும் பிற அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கீழக்கரை நகராட்சி ஆணையருக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், சுகாதார நிலையத்தின் முன்புறத்தில் முறையான நுழைவுவாயில் மற்றும் பேவர் பிளாக் தளம் அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்கி, தேவையான அனைத்து பணிகளையும் விரைந்து நிறைவேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அரசு மருத்துவ சேவைகளை பொதுமக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பெறும் வகையில், சுகாதார நிலையத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் காலதாமதமின்றி ஏற்படுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி, மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
தேசிய முக்குலத்தோர் கழகத்தினர் திருப்பூர் புதிய அதிமுக மாவட்ட செயலாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் .
ஒட்டன்சத்திரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சேவைகள் – நலத்திட்ட முகாம்.
ஒட்டன்சத்திரத்தில்வி.சி.க வணிகர் அணி மண்டல செயற்குழு கூட்டம்,