May 14, 2026

குதிரை பேரம் நடத்த தவெகவுக்கு அவசியம் இல்லை: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

சிடிஆர். நிர்​மல்​கு​மார்

சென்னை: குதிரை பேரம் நடத்த வேண்​டிய அவசி​யம் தவெக​வுக்கு இல்​லை. அதற்​கான தேவை​யும் எழவில்லை என்று அமைச்​சர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: முதல்​வர் விஜய் தொடர்ந்து ஆட்​சி​யில் நீடிக்க வேண்​டும் என்று ஆதரவு தெரி​வித்து 144 எம்​எல்​ஏக்​கள் வாக்​களித்​துள்​ளனர்.

எந்த நோக்​கத்​துக்​காக மக்​கள் விஜய்யை முதல்​வர் ஆக்​கி​னார்​களோ, அந்த எண்​ணம் நூறு சதவீதம் நிறைவேற்​றப்​படும். சட்​டப்​பேரவை தற்​போது புதுப்​பொலிவு பெற்​றுள்​ளது. இந்த ஆட்​சி​யில், அனைத்து மக்​கள் நலத் திட்​டங்​களும் தொய்​வின்​றித் தொடரும்.

மற்ற கட்​சித் தலை​வர்​களை சந்​தித்​தது போலத்​தான் அதி​முக நிர்​வாகி​களை​யும் விஜய் சந்​தித்​தார். இதில் குதிரை பேரம் நடத்த வேண்​டிய அவசி​யம் இல்​லை. அதற்​கான தேவை​யும் இல்​லை.

நீட் தேர்​வில் கடந்த 5, 6 ஆண்​டு​களாகவே தொடர்ந்து குளறு​படிகள் நடக்​கின்​றன. இதனால் லட்​சக்​கணக்​கான மாணவர்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பின் அடிப்​படை​யில் நடத்​தப்​பட்​டாலும், நீட் தேர்வு தேவை​யில்லை என்​பது​தான் எங்​கள் கட்​சி​யின் உறு​தி​யான நிலைப்​பாடு. ஒரு சாதாரண தேர்​வைக் கூட மத்​திய அரசால் சரி​யாக நடத்த முடிய​வில்​லை.

தேர்​வர்​களை கடும் சோதனைக்கு உட்​படுத்​தும் மத்​திய அரசு, வி​னாத்​தாள் கசிவை தடுக்க இயலாத நிலை​யில் உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Spread the love