March 18, 2026

கொங்கு மண்டல வியாபாரிகள் சங்க நிறுவன தலைவர் வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச்.17-

கொங்கு மண்டல வியாபாரிகள் சங்க நிறுவன தலைவர் மகிஷா ரமேஷ் குமார், தேர்தல் கமிஷன் தலைமை அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-திருப்பூர் மாவட்டத்தில் வியாபாரிகள் சிறு, குறு மற்றும் நடுத்தர கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்கள், தனது கடையில் இருந்து 5 கி.மீ தொலைவில் சென்று தான் மளிகை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.மேலும் வியாபாரிகள் ரொக்கமாக பணம் கொண்டு வந்து கடைவீதியில் அரிசி, மளிகை, காய்கறி போன்ற பொருட்கள் தினமும் கொள்முதல் செய்து வருகிறார்கள். தற்போது சட்ட மன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் ரூ.50 ஆயிரத் துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப் படுகிறது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டில், மளிகை பொருட்க ளின் விலை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது அதன் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே வியாபாரிக ளின் நலனை கருத்தில் கொண்டு ரூ.1 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறி உள்ளார்.

Spread the love