இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிரணி (விம்) சார்பில் ராமநாதபுரம் சந்தைத் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. மகளிரணி தலைவர் ரம்ஜான் பேகம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஜெமீலு நிஷா, மாவட்ட பொதுச்செயலாளர் சுலைமான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் ஜெமீல் கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஜ்முதீன், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதித் தலைவர் பீர் மைதீன், தொகுதிச் செயலாளர் அக்பர் அலி, திருவாடானை சட்டமன்றத் தொகுதித் தலைவர் அனீப் தொகுதி துணை தலைவர் மூர்த்தி தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் அஷரப் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் கலந்து கொண்டனர். மழையிலும் குடைபிடித்தபடி பங்கேற்ற பெண்கள், தேர்தல் ஆணையருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

More Stories
அணைப்பாளையம் மேம்பாலம் திறப்பு விழா
மூமுக திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா
கட்டாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை