நாமக்கல் சட்டசபை தொகுதியில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் உள்பட 33 வேட்பாளர்கள் 48 வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். அம்மனுக்கள் மீதான பரிசீலனையின்போது, வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சியினர் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
அதில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக) வேட்பாளர் பழனிசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான பாமக (ராமதாஸ் பிரிவு) வேட்பாளர் அபினேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் இருவரது மனுக்களுக்கும் ஏற்கப்பட்டன. இதுகுறித்து அஇபுதமமுக வேட்பாளர் பழனிசாமி கூறியதாவது: கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் நான் தான் . இந்த தொகுதியில் பாமக (ராமதாஸ் பிரிவு) வேட்பாளர் போட்டியிடுவது எனக்கு தெரியாது என்றார்.
இதுகுறித்து பாமக (ராமதாஸ் பிரிவு) வேட்பாளர் அபினேஷ் குமார் கூறுகையில், சேந்தமங்கலம் பாமக ஒன்றிய செயலாளராக உள்ளேன். கூட்டணிக் கட்சி இடைஞ்சல் கொடுக்க போட்டியிடவில்லை. மாம்பழம் சின்னம் கேட்டு தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்.
வழக்கமாக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர் போட்டியிடாமல் பிரச்சாரம் மட்டும் மேற்கொள்வர். ஆனால் நாமக்கல் தொகுதியில் அஇபுதமமுக மற்றும் பாமக (ராமதாஸ் பிரிவு) ஆகிய கூட்டணிக்கு கட்சிகள் போட்டியிடுவது மட்டுமின்றி, இது இரு கட்சி வேட்பாளர்களுக்கும் தெரியாதது மற்ற அரசியல் கட்சியினர் மத்தியில் ‘சிரிப்பை’ ஏற்படுத்தியது.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்