July 8, 2026

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது சாதி பட்டியல் மூலம் தேர்வு செய்யும் முறையை கடைபிடிக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சாதிவாரி கணக்​கெடுப்​பில் சாதி பட்​டியலை இணைத்து தேர்வு செய்​யும் முறையை கடைபிடிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் 16 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புக்​கான முன்​னோட்ட ஆய்​வில், சாதி​களை குறிப்​பிடு​வதற்​கான இடம் காலி​யாக விடப்​பட்​டு, அதில் சாதி​யின் பெயரை எழுதும் முறை கடைபிடிக்​கப்​படு​வ​தாக வெளி​யாகும் செய்​தி​கள் கவலை​யளிக்​கின்​றன.

தோல்​வியடைந்த இந்த முறையை பின்​பற்​று​வதன் மூலம் சாதி​வாரி கணக்​கெடுப்​பின் நோக்​கமே சிதைக்​கப்​பட்டு விடக்​கூடும். கடந்த 2023-ம் ஆண்டு பிஹார் மாநிலத்​தில் நடத்​தப்​பட்ட சாதி​வாரி சர்​வே​யில், அரசின் பட்​டியலில் உள்ள சாதி​கள் வரிசைப்​படுத்​தப்​பட்​டு, அதை மக்​கள் தேர்ந்​தெடுத்து நிரப்​பும் முறை கடைபிடிக்​கப்​பட்​டது.

அதன் பயனாக பிஹார் மாநில சாதி​வாரி சர்​வே​யில் துல்​லிய​மான விவரங்​கள் கிடைத்​தன. அதனால்தான் சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பிலும் இதே முறையை பின்​பற்ற வேண்​டும் என பாமக வலி​யுறுத்​துகிறது.

சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்பில் குழப்​பங்​களை ஏற்​படுத்​தும் வகை​யில், சாதி விவரங்​கள் பதிவு செய்​யப்​பட்​டால், அது சாதி​வாரி கணக்​கெடுப்​பின் நோக்​கத்​தையே சிதைத்து விடும்.

எனவே, சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பின் இரண்​டாம் கட்​ட​மாக மக்​களை எண்​ணும் பணி நடை​பெறும் போது, அரசின் சாதி​கள் பட்​டியலைக்காட்​டி, அதிலிருந்து அவர்​களின் சாதி மற்​றும் எண்ணை பதிவு செய்​யும் முறையை, இந்​திய மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு ஆணை​யம் கடைபிடிக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Spread the love