‘டிராமா கம்பனி’ (Drama Company) தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சசிகுமார் நடித்த `டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பின்னர் `வித் லவ்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். தற்போது இவர் அடுத்து நடிக்கும் படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்புதிய திரைப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் உடன் இணைந்து நடிக்கிறார் அபிஷன்.
இத்திரைப்படத்தின் மூலம் கௌதம் சிவராமன் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தின் துவக்க விழா மற்றும் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் ஷிவானி நாகாரம் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகலட்சுமி, பிக் பாஸ் புகழ் கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ், இயக்குநர் சி. பிரேம்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர் மணிகண்டன், கென் கருணாஸ், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, ஆவுடையப்பன், நடிகர் ரிஷிகாந்த், பிரபு ராம் வியாஸ், மதன், கருப்பையா சி. ராம் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். பாலமுருகன்.அ தலைமையிலான புதிய தயாரிப்பு நிறுவனம் ‘டிராமா கம்பனி’ (Drama Company) தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

More Stories
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ரிலீஸ் எப்போது? படக்குழுவின் புது அப்டேட் | Suriya| Vishwanath & Sons
“100ஆவது படம் எடுக்க வேண்டும் என்ற அவரின் கனவு..” – கலங்கி பேசிய விக்ரமன் | R B Choudary | Vikraman