
புதுடெல்லி: டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் ஒரு அரங்கம் நொய்டாவில் உள்ள கல்கோடியாஸ் என்ற தனியார் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி ஒருவர் ‘ஓரியான்’ என்ற ரோபோட்டிக் நாயை காட்சிக்கு வைத்திருந்தார்.
இது தங்கள் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு மையத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறி, அதன் சிறப்பு அம்சங்களை பார்வையாளர்களுக்கு விளக்கினார். ஆனால், உண்மையில் இது சீனாவின் யுனிட்ரீ என்ற நிறுவனத்தின் ஜீஓ2 என்ற ரோபோட்டிக் நாய். இது ஆன்லைனில் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்கப்படுகிறது.
இதற்கு ‘ஓரியான்’ என பெயர் வைத்து கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் தங்களின் சொந்த தயாரிப்பு என ஏஐ கண்காட்சியில் விளம்பரப்படுத்தியுள்ளது. இதை சீன ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ஏஐ உச்சி மாநாடு திட்டமிடப்படாத விளம்பர கேலிக்கூத்து. இங்கு இந்திய தரவுகள் விற்கப்படுகின்றன. சீன தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவை கேலிக் கூத்தாக்கிவிட்டது மோடி அரசு” என கூறியுள்ளார்.
கல்கோடியாஸ் வெளியேற்றம்: இதுதொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து டெல்லி கண்காட்சி அரங்கை காலி செய்யும்படி கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

More Stories
டெல்லி: தலைநகர் டெல்லியில, ஆறு நாள் ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற 2 பாம்பு பிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான பணி ஆணை
அயோத்தி ராமர் கோயிலால் பொருளாதார மறுமலர்ச்சி: 2024-ல் 11 கோடியாக உயர்ந்த பக்தர்கள் எண்ணிக்கை