சென்னை: சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் எச்சரித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினம் ஆக.15-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள், தமிழ்நாடு மதுபான விதிகள் ஆகியவற்றின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், எஃப்எல்.2 உரிமம் பெற்ற கிளப் பார்கள், எஃப்எல்.3 உரிமம் பெற்ற ஹோட்டல் பார்கள், மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் என அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் மதுபான விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

More Stories
80-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் 30 கோயில்களில் அமைச்சர்கள் பங்கேற்புடன் சிறப்பு வழிபாடு, பொது விருந்து
சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றும்முன் ‘வந்தே மாதரம்’ – நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவு
மாண்டேக் சிங் அலுவாலியா குழு: முதல்வர் விஜய்யுடன் ஆலோசனை