சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 4 நாளில் பவுனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,200க்கு விற்பனையானது.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,760க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,430க்கும், பவுனுக்கு ரூ.1680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7,440க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது.
நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,500க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1, லட்சத்து 8000க்கும் விற்றது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து 4 நாளில் பவுனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நேற்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240க்கும், கிலோ ரூ. 2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

More Stories
Itel Zeno 100 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்… உலகக் கோப்பை போட்டியில் வருமானம் எவ்வளவு?
தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.1680 அதிகரிப்பு