November 27, 2026

சென்னை, மதுரை உள்பட 7 இடங்களில் PF–ESI குறைதீர் முகாம் 

சென்னை, நவ. 26: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) சார்பில், நவம்பர் 27-ம் தேதி தமிழகத்தின் 7 இடங்களில் குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.

சென்னை அயனாவரத்தில் உள்ள ESIC கிளை அலுவலகத்தில் சென்னைக்கான முகாம் நடைபெறும். மதுரை மண்டலத்தில் காலை 9.15 மணி முதல் மதுரை முனிச்சாலை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, சிவகாசி, பழனி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.

EPFO உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், நிறுவனங்கள் மற்றும் ESIC பயனாளர்கள் தங்களது குறைகள், கோரிக்கைகள், சந்தேகங்களை அதிகாரிகளிடம் நேரடியாகத் தெரிவித்து தீர்வு பெறலாம். தேவையான ஆவணங்களையும் கொண்டு செல்லலாம்.

Spread the love