சென்னை: சென்னை வெளிவட்டச் சாலைத்தொடர்பான தனியார் ஒப்பந்த முயற்சியை, தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை நீளும் வெளிவட்டச் சாலை என்பது தமிழகத்தின் பொருளாதார ஓட்டத்தைத் தாங்கி நிற்கும் முக்கியமான பொதுச் சொத்து.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சரக்குப் போக்குவரத்தையும் தொழில் வளர்ச்சியையும் வேகப்படுத்தும் இந்த கட்டமைப்பை, நீண்டகால வருமான உரிமையுடன் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிப்பது மிகுந்த கவலைக்குரியது.
தமிழக அரசு மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கிய உள்கட்டமைப்பின் பயனை, பல ஆண்டுகள் தனியார் நிறுவனம் அனுபவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்வது, எந்த வகையிலும் மக்கள் நல ஆட்சிக்கு ஏற்றதல்ல.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் அனைத்தும் வெளிப்படையான முறையில் விளக்கப்பட வேண்டும். சென்னை வெளிவட்டச் சாலைத் தொடர்பான தனியார் ஒப்பந்த முயற்சியை, தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
ரூ.1200 கோடியில் சென்னையில் புதிய தலைமைச் செயலகம்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
“தேர்தல் வாக்குறுதியின்படி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக” – டிடிவி தினகரன்
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்: முதல்வர் விஜய்