ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தனுஷ்கோடிக்கு செப்டம்பர் 27-ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் செல்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு விவரம் வருமாறு: தமிழ்நாடு சுற்றுலாத்துறை, அபிநய நாட்டியாஞ்சலி அறக்கட்டளை இணைந்து உலக சுற்றுலா தினமான செப்படம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் முன்னிலையில் தனுஷ்கோடியில் இரண்டு கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் சுமார் 1000 நடனக்கலைஞர்களை வைத்து நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் போற்றும் விதமாகவும், நமது இந்தியாவின் கடைசி எல்லையான தனுஷ்கோடியில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது.
இதனால் தனுஷ்கோடி பகுதியில் காலை 6 மணி முதல் 10 வரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் வருவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
நியூயார்க் சுற்றுலா: கலாச்சாரங்கள் சங்கமிக்கும் கனவு நகரம்
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை