புதுடெல்லி: சோனியா காந்தி இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றது குறித்து விகாஸ் திரிபாதி என்பவர் 2025 ஆகஸ்டில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்ற நடுவர் வினோத் ஜோஷி முன்பு விசாரணைக்கு வந்தது. புகார்தாரர் 1980, 1981, 1983-ம் ஆண்டுகளுக்கான சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை சமர்ப்பித்தார்.
அவற்றைப் பரிசீலித்த நீதிபதி, 1980-ம் ஆண்டு பட்டியலின் அசல் சான்றளிக்கப்பட்ட நகலைத் தாக்கல் செய்யுமாறு அவருக்கு உத்தரவிட்டார். மேலும், இந்திரபிரஸ்தா எஸ்டேட் காவல் நிலையம் இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More Stories
கேரளாவை உலுக்கிய மெர்சிடிஸ் கார் விபத்தில் உயிரிழந்தவரின் ஓட்டலை ஏற்று நடத்தும் மகள்
குல்காம் தாக்குதல் தீவிரவாதியிடம் வீடியோ காலில் பேசி சரணடைய வேண்டுகோள் விடுத்த பாதுகாப்பு படையினர்
ரூ.15 கோடி லாபம் ஈட்டிய ஜவுளித் தொழிலை கைவிட்டு சமணத் துறவறம் ஏற்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்