March 20, 2026

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் 

சோழவந்தான் மார்ச் 20

மதுரை மாவட்டம் 

சோழவந்தான்  அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் கோவில் 50 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா  கொடியேற்றத்துடன் துவங்கியது  1000 ஆண்டுகள்  பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ  ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவில் பிரமோற்சவ  விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம்  இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக 50 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது முன்னதாக 

கருடன் படம் பொருந்திய கொடியை சுமந்து அர்ச்சகர் பார்த்தசாரதி சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக கேரளா செண்டை மேளம் முழங்க ஊர்வலத்தில் வந்தனர் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டர் பட்டர்கள் ஜெகநாதன் பிரகாஷ் மோகன் முத்துகிருஷ்ணன் முத்து நாராயணன் ஆகியோர் வேத பாராயணங்கள் முழங்க நாதஸ்வர மேள வாத்தியத்துடன் கோயில் கொடி மரத்தில் பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க கொடியேற்று விழா  நடைபெற்றது முக்கிய திருவிழாவாக மார்ச் 24 ம் தேதி செவ்வாய்க்கிழமை பட்டு பல்லக்கு நிகழ்ச்சியும் மார்ச் 25ம் தேதி திருக்கல்யாண சுப வைபோக விழாவும் கோலாலமாக நடைபெற உள்ளது  அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி இராம நவமி 28ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெற்று 29ஆம் தேதி நிறைவு நிகழ்ச்சியான விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது  இந்த பிரம்மோற்சவ விழாவில் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள்  வருகை தந்து பெரு மாலை வழிபட்டு செல்வர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தை முன்னிட்டு அனைவருக்கும்  பிரசாதம் வழங்கப்பட்டது  ஏற்பாடுகளை உபயதாரர் சோழவந்தான் முதலியார் கோட்டை சி கன்னியப்ப முதலியார் குடும்பத்தார்கள் மற்றும் சுரேஷ் உகந்தாச்சிய பிள்ளை கோயில் செயல் அலுவலர் தாரணி  கணக்கர்முரளிதரன் அர்ச்சகர் பார்த்தசாரதி ஆலய பணியாளர்கள் ஊழியர்கள் செய்து வருகின்றனர் திருவிழா காலங்களில் தினமும் மாலை சக்கரத்தாழ்வார் புறப்பாடு நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சி தொடர்ந்து மாலை அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலிக்க பட்டிருந்தது

Spread the love