சென்னை: ஜியோ நிறுவனத்தின் 10-ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு விலையேற்றத்தில் இருந்து ஓராண்டுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.299 திட்டத்தில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா உள்பட அனைத்து சலுகைகளும் எந்த மாற்றமும் இன்றி தொடரும் என ஜியோ உறுதி அளித்துள்ளது. அடுத்த ஓராண்டுக்கு (2027-ம் ஆண்டு செப்.5 வரை) ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்தாலும், பிரைம் வாடிக்கையாளர்கள் தற்போதைய ரூ.299 கட்ட ணத்தை தொடர்ந்து ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம்.
இத்திட்டத்தில் அனைத்து சலுகைகளும் எந்த மாற்றமும் இன்றி தொடரும் என வாடிக்கையாளர்களுக்கு ஜியோ உறுதி அளித்துள்ளது.
ரூ.299 திட்டத்தில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா, 28 நாட்கள் செல்லுபடியாகும் காலம், ஜியோ ஹாட்ஸ்டார், 5 ஆயிரம் ஜிபி ஸ்டோரேஜ், ப்ரோ கூகுல்ஜெமினி ஆகியவை இடம்பெற்றுள்ளன. புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் ரூ.300 செலுத்தி இந்த மெம்பர்ஷிப்பில் இணையலாம்.
புதிய ஜியோஹோம் அல்லது ஜியோபிசி இணைப்புக்கு ரூ.300 வவுச்சர். நண்பர்கள்/ குடும்பத்தினருக்கு புதிய ஜியோசிம் இணைப்புக்கு ரூ.300 வவுச்சர். சிறப்பு மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.600 மதிப்புள்ள கேஷ்பேக் வவுச்சர்கள், புதிய சேவைகளை முன்கூட்டியே பயன்படுத்தும் ஏர்லி அக்சஸ் (Early Access) வசதி, முன்னுரிமை வாடிக்கையாளர் சேவை (Priority Support) ஆகிய சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
இணையும் வழிமுறை
MyJio செயலி, Jio.com இணையதளம், ஜியோ ஸ்டோர்கள் மற்றும் அதன் தொடர்புடைய கடைகள் மூலம் இத்திட்டத்தில் இணையலாம்.

More Stories
டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு புகார்: மேட்டூரில் 3 தனியார் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
“தலைநகர் சென்னையில் பொதுமக்கள் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?” – வேல்முருகன் கேள்வி
தென்மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷா வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து