தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கும் நிலையில், எம்.எல்.ஏ-களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தவெக ஆட்சியமைத்திருக்கும் நிலையில், அக்கட்சியில் இருந்து மட்டும் 101 பேர் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், அனைத்துக் கட்சிகளில் இருந்தும் 145 பேர் முதன்முறையாக சட்டமன்றம் சென்றிருக்கின்றனர்.
ஒவ்வொரு, முறையும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ-களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அந்தவகையில் தான், சென்னையில் 2 நாட்களுக்கு எம்.எல்.ஏ-களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடத்தப்படும் எனவும் அதில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர் தெரிவித்திருந்தார்.
ஜே.டி.சி பிரபாகர்Pt web
இந்தசூழலில் தான், ஜூன் 18-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. இதையடுத்து, இன்று மற்றும் நாளை எம்.எல்.ஏ-களுக்கான பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த பயிற்சி முகாமில், சட்டப்பேரவை நடைமுறைகள், உறுப்பினர்கள் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

More Stories
ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு
கரு. பழனியப்பனின் `குக்கர்’.. படத்தின் தலைப்பை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்!
முதல்வர் விஜய்க்கு, நடிகர் விஷாலின் வித்தியாசமான பரிசு! | CM Vijay | Vishal