வாஷிங்டன்: ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது புதன்கிழமை அன்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் உறுதிபட தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் மோதல் வெடித்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் தாக்குதலை இடைக்காலமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபடவில்லை என தகவல்.
ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் இந்த சூழல் அப்படியே அங்கு மாறியுள்ளது. இப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. அதை தங்களது வான் பாதுகாப்பு கவசம் இடைமறித்து அழித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
அமெரிக்கா பதிலடி
“தாக்குதல் இடைக்காலமாக நிறுத்தப்பட்டிருந்த சூழலில் மீண்டும் தாக்குதலை தீவிரமாக தொடுத்தோம். (இந்த தாக்குதல் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது). மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதற்கு பதிலடியாக இந்த சக்திவாய்ந்த தாக்குதலை மேற்கொண்டோம்” என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் மேற்கொண்டதை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் தங்கள் நாட்டின் தெற்கு பகுதியில் ஏவுகணை மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

More Stories
இந்திய, சீனப் பொருட்கள் மீது 100% வரி: மசோதாவுக்கு அமெரிக்க செனட் அவை ஒப்புதல்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு – பிரதமர் தலைமையில் பேரிடர் நிவாரண குழு அமைப்பு
ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு