August 1, 2026

ஜோர்டான் முகாம் மீதான தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்

கெய்ரோ: ஈ​ரானில் பல இடங்​களை குறி​வைத்து அமெரிக்கா நேற்று முன்​தினம் இரவு மிகப் பெரிய தாக்​குதலை நடத்​தி​யது. இதில் ஈரானின் பல இடங்​களில் உள்ள ஏவு​கணை மற்​றும் டரோன் மையங்​கள், கண்​காணிப்பு மையங்​கள், ராணுவ தளங்​கள் அழிக்கப்​பட்​டன.

ஈரான் மீது தொடர்ந்து 2 வாரங்​களாக தாக்​குதல் நடத்தி வந்த அமெரிக்​கா, ஆயுதக் கையிருப்பு குறைந்​த​தால் ஈரான் மீதான தாக்​குதலை நிறுத்தி வைத்​திருந்​தது. ஈரானுக்கு ஆதர​வாக ஈராக்கில் செயல்​படும் ஹவுதி தீவிர​வாத அமைப்​பு​கள், சவுதி அரேபியா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களை குறி​வைத்து ட்ரோன் தாக்​குதல் நடத்​தின.

இதனால் சவுதி அரேபி​யா​வும், அமெரிக்கா​வும் இணைந்து ஈராக்கில் உள்ள ஹவுதி தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்தின. இதில் 26 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். இதற்கு பதிலடி​யாக ஜோர்​டானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​களை குறி​வைத்து ஈரான் 5 ஏவு​கணை​களை வீசி​யது. இவற்றை ஜோர்டான் வான் பாது​காப்பு கருவி​கள் நடு​வானில் அழித்​தன.

ஈரானின் இந்த எதிர்​பா​ராத தாக்​குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதன்​படி நேற்று முன்​தினம் இரவு ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மிகப் பெரிய தாக்​குதலை நடத்​தி​யது. இதில் ஈரானின் பல இடங்​களில் உள்ள ஏவு​கணை மற்​றும் ட்ரோன் மையங்​கள், கண்​காணிப்பு மையங்​கள், ராணுவ தளங்​கள் ஆகியவை அழிக்​கப்​பட்​டன.

குவைத் மீது தாக்​குதல்:

இதையடுத்து குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்​குதல் நடத்​தி​யது. இதில் சீன நிறு​வனத்​தின் கட்டிடம் சேதம் அடைந்​தது. இதில் ஒரு​வர் உயி​ரிழந்​தார். எகிப்து நாட்​டின் டமேட்டா துறை​முகத்​தில் நின்​றிருந்த 2 எரி​வாயு கப்பல்கள் மீது ட்ரோன் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இந்​த தாக்குதலை நடத்​தி​யது யார்​ என உடனடி​யாக தெரிய​வில்​லை.

Spread the love