
சென்னை: தரமணி கானகம், பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஜெயப்பிரதா (45). டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவில் (புலனாய்வு மற்றும் உளவுப் பிரிவான எஸ்பிசிஐடி) அதிகாரியாக உள்ளார்.
கடந்த 23-ம் தேதி காலை ஐ.டி. ஊழியரான கணவர் வேலைக்கும், மகன் கல்லூரிக்கும் சென்ற நிலையில், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 69 பவுன் (சுமார் ரூ.8 கோடி) எடை கொண்ட 12 தங்க செயின்கள், 3 ஆரம் மற்றும் 3 ஜோடி கம்மல்கள் திருடுபோயிருந்தது தெரிந்தது.
இது தொடர்பாக தரமணி காவல் நிலையத்தில் ஜெயப்பிரதா புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், ஜெயபிரதா வீட்டில் திருட்டில் ஈடுபட்டது சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த ஆனந்த் (50) என்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆனந்த், திருவான்மியூர் பகுதியிலும் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பியதும் தெரிந்தது. இவரிடமிருந்து 54 பவுன் தங்க நகைகள், ரூ.7.5 லட்சம் மற்றும் செல்போன், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

More Stories
வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 3 நாள் மிதமான பனிமூட்டம் நிலவ வாய்ப்பு
மதுரை மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மீனாட்சியம்மன் கோயில் சுற்றுப்புற மேம்பாட்டுக்கு ரூ.450 கோடி!
பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்