March 24, 2026

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்​களை எட்டும் விராட் கோலி

பெங்​களூரு: டி20 கிரிக்கெட் போட்​டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்​களூரு அணி வீரர் ​(ஆர்​சிபி) விராட் கோலி விரை​வில் 14 ஆயிரம் ரன்​களை எட்​டு​வார் என எதிர்பார்க்​கப்​படு​கிறது. கடந்த 18 ஆண்​டு​களாக ஐபிஎல் போட்​டிகளில் பெங்​களூரு அணிக்​காக விராட் கோலி விளை​யாடி வரு​கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்​டி​யில் முதன்​முறை​யாக பெங்​களூரு அணி கோப்​பையை வென்​றிருந்​தது.

அவர் இது​வரை ஐபிஎல் போட்​டி​யில் 267 ஆட்​டங்​களில் பங்​கேற்று 8,661 ரன்​களைக் குவித்​துள்​ளார். இதில் 63 அரை சதங்​கள் அடங்​கும். மேலும் 339 ரன்​கள் சேர்த்​தால் ஐபிஎல் போட்​டிகளில் 9 ஆயிரம் ரன்​களைக் குவிக்​கும் முதல் வீரர் என்ற பெரு​மை​யைப் பெறு​வார். ஐபிஎல், சாம்​பியன் லீக் டி20 போட்​டிகள் என 282 ஆட்​டங்​களில் ஆர்​சிபி அணிக்​காக பங்​கேற்று மொத்​தம் 9,085 ரன்​களைக் குவித்​துள்​ளார் விராட்.

இன்​னும் 2 சீசன்​களில் அவர் விளை​யாடும்​போது ஒரே ஒரு அணிக்​காக 10 ஆயிரம் ரன்​களை குவிக்​கும் முதல் வீரர் என்ற பெரு​மை​யைப் பெறு​வார் என எதிர்​பார்க்கப்படுகிறது. இது​வரை 414 டி20 போட்​டிகளில் (ஐபிஎல், சாம்​பியன்ஸ் லீக் டி20, சர்​வ​தேச டி20 என அனைத்​தும் சேர்த்​து) விளை​யாடி 13,543 ரன்​களை விராட் கோலி எடுத்​துள்​ளார்.

வரும் சீசனில் விளை​யாடும்​போது அவர் விரை​வில் 14 ஆயிரம் ரன்​களை எட்ட வாய்ப்​புள்​ளது. அவ்​வாறு அவர் 14 ஆயிரம் ரன்​களை எட்​டி​னால் டி20 போட்​டிகளில் 14 ஆயிரம் ரன்​கள் குவித்த முதல் இந்​திய வீரர் என்ற பெரு​மையை விராட் கோலி பெறு​வார்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வீரர் கிறிஸ் கெயில் 14,652 ரன்​களு​டன் முதலிடத்​தி​லும், கைரன் பொல்​லார்ட் 14,482 ரன்​களு​டன் 2-வது இடத்​தி​லும், இங்​கிலாந்​தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 14,449 ரன்​களு​டன் 3-வது இடத்​தி​லும், ஆஸ்திரேலியா​வின் டேவிட் வார்​னர் 14,028 ரன்​களு​டன் 4-வது இடத்​தி​லும் உள்​ளனர். கடந்த 2025-ம் ஆண்டு சீசனில் விராட் கோலி 15 ஆட்​டங்​களில் விளை​யாடி 757 ரன்​கள் குவித்​திருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இதில் 8 அரை சதங்​களும் அடங்​கும்.

Spread the love