
துபாய்: டெல்லி ஏஐ உச்சி மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. இந்த மாநாட்டில் பல நாடுகளும், பல தலைமை செயல் அதிகாரிகளும் (சிஇஓ) பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் நேற்றுமுன்தினம் 19-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள நட்புறவை வெளிப்படுத்தும் வகையிலும், ஏஐ மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீபாவில் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணம் மின்விளக்குகளில் காட்சிப்படுத்தப்பட்டது.
இதற்கு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் பாராட்டு தெரிவித்துள்ளது. “இந்தியா – யுஏஇ இடையே உள்ள உறவை காட்டும் சக்திவாய்ந்த சின்னம் இது” என்று இந்திய தூதரகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
புர்ஜ் கலீபா கட்டிடத்தில் மூவர்ண கொடி ஜொலிக்கும் படத்தை வெளியிட்டு ‘இந்திய ஏஐ மாநாட்டை உலகின் மிக உயர்ந்த கட்டிடம் கொண்டாடுகிறது’ என்ற படவிளக்கத்துடன் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More Stories
“ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகள் ஏற்புடையவை அல்ல” – ட்ரம்ப்
“மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்” – ஈரானிடம் புதின் உறுதி
ஈரான் – அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை மறுப்பு: பாகிஸ்தானில் தொடரும் ராஜதந்திர நகர்வுகள்!