சென்னையில் இன்று (மே 12) ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்தவகையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,100-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1,12,800-க்கு விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,330-க்கும், பவுனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,14,640-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: சென்னையில் வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 95.49 ஆக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. ஈரான் – அமெரிக்கா மோதல் பதற்றம் மீண்டும் வலுத்துள்ளதால் பங்குச் சந்தைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இந்தப் பின்னணியில், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்ததால் ஆபரணத் தங்கம் விலையும் கூடியுள்ளது.

More Stories
இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.1,700 கோடி இழப்பு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1840 உயர்வு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 சரிவு: இன்றைய விலை நிலவரம் என்ன?