சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.25) பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் நிலை ஆகியவற்றால், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக இருக்கிறது.
அந்த வகையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,13,600-க்கும் விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.109 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,491-க்கும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,850-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது.

More Stories
தங்கம் பவுனுக்கு ரூ.2,160 உயர்வு: தொடர்ந்து 2-வது நாளாக விலை அதிகரிப்பு
மின்சார வாகனங்களுக்காக 5 ஆண்டுகளில் 20,000 சார்ஜிங் நிலையங்கள்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
சிவகாசி அச்சகங்களில் 2027 காலண்டர் ஆல்பம் வெளியீடு: 15% வரை விலை உயர்வு