February 28, 2026

தஞ்சையில் மார்ச் 4-ல் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!

தவெக தலைவர் விஜய் தஞ்சையில் மார்ச் 4-ல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

News image

தஞ்சாவூர் : மார்ச் 4-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் அருகே செங்கிப்பட்டியில் நிர்வாகிகளையும் – தொண்டர்களையும் தவெக தலைவர் விஜய் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அண்மையில் சேலம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக வருகிற நான்காம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் பிரசாரக் கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் 3 மணி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்க உள்ளதாகவும் எனவே இந்த கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Advertise with us

இந்த மனு குறித்து விசாரணை நடத்தி இன்று மாலை தகவல் சொல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Spread the love