
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, இன்று தஞ்சாவூர் மாவட்டம், அய்யாசாமிப்பட்டி பிரிவு சாலை எதிரில் நடைபெற்றது.
முன்னதாக, இதற்காக தவெக தலைவர் விஜய் தனி விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை 9:35 மணி அளவில் விஜய் வந்து சேர்ந்தார். பின்னர் அவர் தஞ்சாவூர் செல்வதற்காக தயார் நிலையில் இருந்ததால் தனி வேனில் புறப்பட்டுச் சென்றார். விஜய் வருகையை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள் யாருக்கும் விமான நிலையத்திற்குள் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு வெளியே திருச்சி புதுக்கோட்டை சாலையில் திரளாக காத்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய்யின் வாகனத்தை கண்டு உற்சாகம் அடைந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜய் வாகனத்தின் மீது பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர்.
சிறிது நேரம் ரசிகர்கள், தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜய் பின்னர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். அவரது வாகனத்தை செல்ல விடாமல் ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றனர். மாத்தூர் ரிங் ரோடு அருகே திரண்டு இருந்த ரசிகர்கள் அவரது வாகனத்தை மறித்து வரவேற்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக தலைவர் விஜய் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்திற்குள் நுழைய காவல்துறை கடும் கட்டுப்பாடு விதித்தது. கட்சித் தொண்டர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தேவையற்ற நேர விரயம் ஆவதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
திருச்சி விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த தனியார் தொலைக்காட்சியின் நேரலை வாகனத்தை போலீஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் தனியா தொலைக்காட்சி ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.