சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவராக விஜய் வசந்த் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுக்கான மாநிலத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் முன்மொழிவுக்குக் காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. அதன்படி பிரிவின் மாநிலத் தலைவராக விஜய் வசந்த், ஒருங்கிணைப் பாளர்களாக சக்தி மாரிதாசன், ஜி.கே.முரளிதரன், சிவசத்யராஜா குணசேகரன், சஞ்சய் காந்தி, ஜான் சாமுவேல், அப்துல் ரஹ்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

More Stories
‘பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் ஏன் கூடாது?’ – அன்புமணி அடுக்கும் காரணங்கள்
தமிழகத்துக்கு 6,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தென் மாவட்டங்களில் நடந்த மல்டிலெவல் மார்க்கெட்டிங் மோசடி: பேரவையில் அமைச்சர் விளக்கம்