தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக திண்டுக்கலை சேர்ந்த டாக்டர்.அ.சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் 31 5 26 அன்று நடந்த தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தேர்தலில் இவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர்.அ.சீனிவாசன் அவர்கள் தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மாநிலச் செயலாளராக கோயம்புத்தூரை சேர்ந்த டாக்டர் கனகராஜ் அவர்களும் பொருளாளராக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் பிரபு சங்கர் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக திண்டுக்கலை சேர்ந்த டாக்டர்.அ.சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

More Stories
புளியமரத்துக் கோட்டை ஊராட்சியில் புதிய தமிழக வெற்றிக்கழகம் அலுவலகம் திறப்பு விழா
தவெக எம்.எல்.ஏ பேர ஊழல்: மதுரையைச் சேர்ந்த கணேசன் கைது! இதுவரை கைதானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
பழனியில் காமராஜரின் பிறந்த நாள் விழா