June 5, 2026

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்துக்கு பிரத்யேக இணையதளம்: அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்​நாடு தொழிலா​ளர் கல்வி நிலை​யத்​துக்​கென பிரத்​யேக​மாக உரு​வாக்​கப்​பட்​டுள்ள புதிய இணை​யதளத்தை தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜா.​முகமது பர்​வேஸ் தொடங்கி வைத்​தார்.

தமிழ்​நாடு தொழிலாளர் கல்வி நிலை​யம் கடந்த 1973-ம் ஆண்டு தொடங்​கப்​பட்டு தற்​போது சென்னை அம்​பத்​தூரில் இயங்கி வரு​கிறது. இங்கு தொழிலா​ளர் மேலாண்​மை​யில் பிஏ, எம்​ஏ மற்​றும் முது​நிலை டிப்​ளமா படிப்​பு​கள் நடத்​தப்​படு​கின்​றன.

கடந்த 2001 முதல் முழுநேர மற்​றும் பகு​திநேர ஆராய்ச்​சிப் படிப்பு (பி.எச்​டி) மேற்​கொள்​வதற்​கான ஆராய்ச்சி நிலை​ய​மாக​வும் இந்த கல்வி நிலை​யத்தை சென்னை பல்​கலைக்​கழகம் அங்​கீகரித்​துள்​து.

தனி​யார் மற்​றும் பொதுத் துறை நிறு​வனங்​களில் பணிபுரி​யும் மேற்​பார்​வை​யாளர்​கள், நிர்​வாகி​கள், தொழிற்​சங்​கத்​தினர், தொழிலா​ளர் துறை, தொழில​கப் பாது​காப்பு மற்​றும் சுகா​தார இயக்கக ஆய்​வாளர்​கள் ஆகியோ​ருக்கு கருத்​தரங்​கு​கள், பயிற்சி வகுப்​பு​களை​யும் இந்த நிறு​வனம் நடத்தி வரு​கிறது.

இந்த கல்வி நிலை​யத்​தால் நடத்​தப்​படும் படிப்​பு​கள், பயிற்சி வகுப்​பு​கள், ஆராய்ச்சி செயல்​பாடு​கள், சேர்க்கை தொடர்​பான தகவல்​கள், அறி​விப்​பு​கள் மற்​றும் பிற கல்வி நிலைய நடவடிக்​கைகள் பற்​றிய தகவல்​களை மாணவர்​கள், பொது​மக்​கள் எளி​தில் அறிந்து கொள்​ளும் வகை​யில், https://tils.tn.gov.in என்ற புதிய இணை​யதளம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த இணை​யதளத்தை தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் ஜா.​முகமது பர்​வேஸ் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று தொடங்கி வைத்​தார்.

இந்த நிகழ்​வில் துறைச் செயலர் கொ.வீர​ராகவ ராவ், தொழிலா​ளர் நலத் துறை கூடு​தல் ஆணை​யரும், தமிழ்​நாடு தொழிலா​ளர் கல்வி நிலை​யத்​தின் இயக்​குநரு​மான கோ.சசிகலா உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

Spread the love