சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 98 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்து ஒரு வாரத்திற்கு மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது இதற்கிடையே சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து வானிலையில் மாற்றம் ஏற்பட்ட தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை வரை அதிகபட்சமாக வெப்பநிலை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கனித்துள்ளது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காற்றழுத்த தாழ்வு நிலை

தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்மாறு வானிலை ஆய்வு மையம் 60 தீவு உள்ளது குறிப்பாக மாநிலத்தின் உள் மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை வரை அதிகபட்சமாக வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கிடையில் தெற்கு அசாம் பகுதியில் இருந்து தென்தமிழ்நாடு வரை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை அதிகரிக்க கூடும்

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வரும் இருபதாம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் மழை வாய்ப்பு இருந்தாலும் மாவட்டத்தின் பல உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



More Stories
அதிமுக, பாஜக வேட்பாளர்கள் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு
கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
அமைச்சர் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பு…. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரிமளம் ஒன்றியதிற்க்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்