பழனி ஏப்ரல் 9
தமிழ்நாட்டில் பிராமண நில வாரியம் அமைக்க வேண்டும் என்று, பழனியில் தாம்பிராஸ் பிராமண சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். பழனியில் மாநில தாம்பிராஸ் பிராமண சங்கம் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். மாநில சேர்மன் ராகவ நாராயணன், முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொருளாளர் பழனி ஆடிட்டர் அனந்த சுப்பிரமணியன், மாநில துணைத்தலைவர் ராஜமோகன், மாநில ஆலோசகர் வைத்தியநாதன், கோவை மாவட்ட தலைவர் லட்சுமி வெங்கட்ராமன், மாநில பொது செயலாளர் வெங்கட்நாராயணன், பழனி கிளை தலைவர் சங்கராலயம் சிவக்குமார், ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஆந்திராவில் உள்ளது போல், தமிழ்நாட்டில் பிராமணர் நல வாரியம் அமைக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக பழனி அ.கலையமுத்தூர் அக்ரஹாரம் பகுதியில் புதிய பராபவ ஆண்டு துவக்க விழாவையொட்டி, பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. இதில் மாநில துணைத்தலைவர் ராஜமோகன், தலைமை வகித்தார். இதில் பிரம்ம ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சாங்கத்தை வெளியிட, சங்கராலயம் முருகனடிமை பாலசுப்பிரமணியம் சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.
போட்டோ புட் நோட்
பழனியில் மாநில தாம்பராஸ் பிராமண சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் வரதராஜன், மாநில பொருளாளர் ஆடிட்டர் அனந்த சுப்பிரமணியம், மாநில துணைத்தலைவர் ராஜமோகன், மாநில ஆலோசகர் வைத்தியநாதன், கோவை மாவட்ட தலைவர் லட்சுமி வெங்கட்ராமன், பொதுச் செயலாளர் வெங்கட் நாராயணன் பழனி கிளை தலைவர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்

More Stories
‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ‘ஸ்டாலின் முகாம்கள்’ நடத்தப்படும்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பா.ராணி ஆதரித்து கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தீவிர பிரச்சாரம் .