புது டெல்லி: இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. துயரம் மிகுந்த இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் என் எண்ணங்கள் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.’ எனத் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா சென்னையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளையராஜா, கமல், ரஜினி உட்பட ஏராளாமானோர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக்குப் பிறகு பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு நேற்று எடுத்து செல்லப்பட்டது. அங்கிருந்து வத்தலகுண்டு அருகேயுள்ள அவருடைய காட்ரோட் தோட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, பாரதிராஜாவின் உடலுக்கு இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

More Stories
“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” – மு.க.ஸ்டாலின்
அஞ்சலையம்மாள், நம்மாழ்வார் பெயர்களில் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுடன் விருது
காட்டுப்பன்றிகள் சேதத் தடுப்பு திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு