நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் உட்கோட்டத்திற்குட்பட்ட ஒட்டன் மெத்தை பகுதியில், மல்லிகா என்பவர் தமது இரண்டரை பவுன் தங்கச் செயினை தவறவிட்டதாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், பள்ளிபாளையம் உட்கோட்ட காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம், மல்லிகா அவர்கள் தவறவிட்ட இரண்டரை பவுன் தங்கச் செயினை கண்டுபிடித்து, தேவையான சரிபார்ப்புகளுக்குப் பிறகு பள்ளிபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கௌதம் அவர்கள் உரியவரிடம் ஒப்படைத்தார்.
காவல்துறையினரின் இந்த சிறப்பான மற்றும் துரிதமான நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சு. விமலா.இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காவல்துறையின் இந்த செயற்பாடு பொதுமக்களிடையே நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

More Stories
தேர்தலில் போட்டியிடுவதால் பதவியை ராஜினாமா செய்தார் தஞ்சாவூர் மேயர்
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 115 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக மற்றும் கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு, நாமக்கல் சட்டசடைப தொகுதி வேட்பாளர் ராணியை ஆதரித்து பேசினார்.