May 7, 2026

தவெக ஆட்சியமைப்பில் புதிய சிக்கல்.. விஜய்க்கு ஆளுநர் வைத்த ஒரே நிபந்தனை – சூடுபிடிக்கும் அரசியல்!

118 பேர் ஆதரவு இருந்தால் உடனடியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க தயார் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் மொத்தமாக 108 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

ஆட்சி அமைக்கும் சிக்கலில் தவெக

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உரிமை கோரி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டுவதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியிலும் கட்சி ஈடுபட்டுள்ளது. இதற்காக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம் வழங்கியதாக கூறப்படுகிறது.

  

இதில், கடந்த 11 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சி முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் அழைப்பை ஏற்று, சில நிபந்தனைகளுடன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் இரண்டு இடங்கள் வழங்க வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்றாக கூறப்படுகிறது.

திருமா கொடுத்த HINT… திசை மாறும் அரசியல்?
மேலும், தவெக தலைவர் விஜய் தனது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி நடந்தால், தவெகவின் பலம் 108 இலிருந்து 107 ஆக குறையும். தற்போது காங்கிரஸின் 5 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலும், மொத்த எண்ணிக்கை 112 ஆகவே உள்ளது. ஆட்சியை அமைக்க இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதால், அடுத்த கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கூட்டணி ஆதரவை நாடும் விஜய்

இந்த நிலையில், நேற்று தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன் , ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தனர். அப்போது, 112 எம்.எல்.ஏ ஆதரவு இருப்பதாகவும், அதனடிப்படையில் முதலமைச்சராக பொறுப்பேற்று சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.ஆனால் ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை எண்ணிக்கையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு பட்டியல் இல்லாமல், 112 உறுப்பினர்களின் விவரங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மீதமுள்ள ஆதரவு தொடர்பான முழுமையான தகவல்களையும் வழங்குமாறு ஆளுநர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மீண்டும் தவெக தலைவர்கள் ஆளுரை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் வரை நீடித்த்தாக கூறப்படுகிறது. ஆளுநருடன் என்ன மாதிரியான சந்திப்பு நடந்தது என எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து மக்கள் பவன் விளக்கம்.

  • மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்பட்டது ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது,
  • தவெக விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசனிடம் ஆளுநர் மாளிகை கருத்து கேட்டதாக தகவல்.
  • மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசன் தனது கருத்துகளை ஆளுநர் மாளிகைக்கு வழங்கியதாகவும் தகவல்.
  • மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சுந்தரேசன் கொடுத்த அறிவுறுத்தலின் அடிப்படையில் முடிவு
  • 108 எம்எல்ஏக்கள் உள்ள தனிப்பெரும் கட்சியாக வந்து தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை
  • காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு என கூறி 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது தவெக
  • கூட்டணி என குறிப்பிட்டுள்ளதால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல்
  • தாங்கள் தான் தனிப்பெரும் கட்சி என கூறி ஆட்சி அமைக்க தவெக உரிமை கோரவில்லை
  • கூட்டணியுடன் வந்துள்ளதால் வேறு எந்த கட்சிகள் தவெகவை ஆதரிக்க உள்ளன என கேட்டுள்ளோம்
  • நாங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில் முடிவு.
Spread the love