November 15, 2026

திண்டுக்கல்லில் காங்கிரஸ் சார்பாக மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி முகாம்

 பழனி நவம்பர் 14
 திண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டியின் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி முகாமில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு, பழனி நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பத்மினி முருகானந்தம் அவர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் திருவுருவப்படத்தை, நினைவுப் பரிசாக வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும், மாவட்டத் தலைவர்கள் சாமிநாதன், துரைமணிகண்டன், மாவட்டப் பார்வையாளர் சுரேஷ், மண்டலத் தலைவர்கள் வீரமணி, நேரு, முகமது அலி, ஹக்கீம், மல்லிகா, தங்கமணி, மாவட்டத் துணைத் தலைவர் முத்துவிஜயன், அரசியல் விவகாரக் குழு உறுப்பினர்கள் முருகானந்தம், சுந்தர், மாவட்டப் பொதுச்செயலாளர்கள் ராமநாதகிருஷ்ணன் , நஸ்ரூல் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Spread the love