February 28, 2026

திமுக – கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – அதிக சீட்டுகளை கேட்டு கோரிக்கை!

திமுக – கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டணியில் புதிய கட்சிகள் வருகை காரணமாக தொகுதி எண்ணிக்கையை குறைத்து கொள்ள திமுக வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

CM MK Stalin
CM MK Stalin(புகைப்படங்கள்- Samayam Tamil)

திமுக தலைமை தனது கட்சிக்குள் நாளுக்கு நாள் புது புது கட்சிகளையும் அரசியல் ஆளுமைகளையும் இணைத்து வருகிறது. திமுகவின் கூட்டணி வியூகம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் 2021 -ல் இருந்து திமுகவுடன் கூட்டணியில் தொடரும் விசிக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமை மீது அதிருப்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த 21 -ஆம் தேதி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் அந்த கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை எதுவும் முழுமை அடையவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணியில் புதிய தொகுதிகள் வருவதால் தொகுதி எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள திமுக வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

  

Get started today!Interactive Brokersகடந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் கொடுக்கப்பட்டது. எனவே இந்த முறை நான்கு தொகுதிகள் தர திமுக முன் வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு கொடுத்த அதே எண்ணிக்கையிலான தொகுதியை பெற்றுக்கொள்ள திமுக கோரிக்கை விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்திருக்கின்றன இந்த புதிய வரவு காரணமாக தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டும் என திமுக வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

கூட்டணி வலுவடைந்து இருப்பதில் மகிழ்ச்சி தான் என்றாலும் அதே நேரத்தில் தங்களின் வலிமைக்குரிய எண்ணிக்கையில் தொகுதிகளை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி இருக்கின்றன. ஏற்கனவே தேமுதிக இணைவால் மற்ற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வந்தது.

அதிருப்தியில் திமுக கூட்டணிக் கட்சிகள்

கூட்டணி கட்சிகள் திமுக தலைமை மீது, கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தவாக உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்த முறையை விட இம்முறை மிக குறைவான தொகுதிகளையே பெறக்கூடும் என சொல்லப்படுகிறது. மேலும் விசிக இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவே இல்லை என சொல்லப்படுகிறது. மேலும் விசிகவிற்கு இரண்டே இரண்டு இடங்களே வழங்கப்படும் என்ற பேச்சுக்களும் தொடர்கின்றன.

மேலும் 2021 ஆம் ஆண்டிலிருந்து கூட்டணியில் தொடரும் கட்சிகளின் தொகுதிகளை குறைத்துவிட்டு, புதிதாக வரும் கட்சிகளுக்கு அதிக அளவிலான சீட்டுக்களை ஒதுக்குவதா என கூட்டணிக்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த அமளிகளுக்கு இடையில்தான், காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டு பிரச்சனையில் மீண்டும் ஈடுபட உள்ளது.

திமுகவின் டி.ஆர்.பாலு தலைமையில் நடத்தப்படும் இந்த தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் காங்கிரசின் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு கலந்துகொள்ள உள்ளது. இந்த கூட்டணி இழுபறி இன்று நிறைவடையும் என்கின்றனர் விமர்சகர்கள்.

Spread the love