திருச்சியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மதியம் 12 மணியளவில் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தவெக சார்பில் 234 தொகுதிகளுக்காக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் தலைவர் விஜய் அறிவித்தார். அதன்படி, பெரம்பூர் மற்றும்திருச்சி கிழக்கு தொகுதி என இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இந்த நிலையில்,பெரம்பூரில் வேட்புமனுத்தாக்கல் செய்த விஜய், தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அப்போது அளவுக்கு அதிகமான கூட்டம் கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து விஜய் நடத்தும் பிரச்சாரம் மற்றும் பரப்புரை நடத்துவதில் பல சர்ச்சைகள் சுற்றி வந்துக் கொண்டு இருக்கும் நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்க்கொள்ள உள்ளார்.
வில்லிவாக்கம் ரியல் போட்டி யாருக்கு இடையில்?
அதற்காக இன்று காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி புறப்படுகிறார் . இன்று மதியம் 12 மணிக்கு அதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் தவெக தலைவர் விஜய்.அதைத் தொடர்ந்து மரக்கடை பகுதியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.திருச்சியில் மட்டும் பரப்புரைக்காக விஜய் 4 இடங்களில் அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது வரை ஒரு இடத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
- இந்த நிகழ்ச்சிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் முறையாக தயார் நிலையில் உள்ளன.
- இதனைத் தொடர்ந்து, தலைவரின் வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- பிரச்சார வாகனத்தை பின்தொடராமல் ஒழுங்கை பேண வேண்டும்.
- பிரச்சார நிகழ்வில் பொதுமக்கள் நேரில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- குறிப்பாக சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வராமல் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசியல் திருப்புமுனையா திருச்சி
திருச்சி என்பது அரசியல் திருப்புமுனைகளுக்கு பெயர் பெற்ற நகரமாக பார்க்கப்படுகிறது. இதற்காக பல காரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் வரலாற்றில் இந்து திணிப்புக்கு எதிராக முக்கிய போராட்டங்கள் நடைபெற்ற இடங்களில் ஒன்றாக திருச்சி திகழ்கிறது. மேலும் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா அல்லது வேண்டாமா என்று கேள்வி முதன் முதலில் எழுந்தது திருச்சியில் தான். அதேபோல் 1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகிய எம்ஜிஆர் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியது. திருச்சியில் தான் இவ்வாறு வரலாற்று பின்னணி திருச்சிக்கு ஏராளம் என்று கூறலாம். மறுபுறம் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் தொண்டர்களை எளிதில் ஒருங்கிணைக்க முடியும் என்பதாலும் அரசியல் கட்சிகள் திருச்சியை முக்கிய மையமாக தேர்வு செய்கின்றனர்.
தனித்துக் களமிறங்கும் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலை முதன்முறையாக தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.அரசியலில் தவெகவுடன் கூட்டணி வைத்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தார்.இதன்மூலம் பெரிய கட்சிகள் இணைந்தால், வெற்றி பெற்று முதல்வராகி விடலாம் என்று விஜய் எண்ணினார்.இதனைப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டுமென்று திமுகவிடன் அடம் பிடித்தது.ஆனால், திமுக தலைமையோ, தமிழகத்தில் ஒருப்போது கூட்டாச்சு செயல்படாது என்று வெளிப்படையாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மறைமுகமாக கூட்டணி தவெகவுடன் காங்கிரஸ் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.இதற்கு மாறாக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெக பக்கம் சாய்வது போல் தெரிந்தாலும், திமுக அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால், தவெக விஜய் தனித்து களம் காண்கிறார்.

More Stories
வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி இன்று வேட்புமனு தாக்கல்..- மீண்டும் வெற்றி பெறுவாரா? தொகுதி அலசல்!