புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலை மாநிலத்தின் தலைமைச் செயலாளராக நியமித்துள்ளார்.
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக – தேர்தல் ஆணையைத்தின் திருட்டு சந்தையில் திருட்டு எவ்வளவு பெரியதோ, பரிசும் அவ்வளவு பெரியது” என்று கூறியுள்ளார். இந்த நியமனத்தை தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் திரிணமூல் காங்கிரஸும் கடுமையாக விமர்சித்துள்ளது.
இக்கட்சியின் சாகேத் கோகலே வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “தேர்தல் ஆணையத்துக்காக மேற்கு வங்க தேர்தலை நடத்திய மனோஜ் அகர்வால், புதிய பாஜக அரசால் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவும் தேர்தல் ஆணையமும் தேர்தலை திருடியதை இப்போது வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றன. இவை நீதிமன்றங்களின் கண்களுக்கு தெரியவில்லையா ?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

More Stories
கம்யூனிஸ்ட் உறுப்பினர் விவரம் சேகரிக்க கூறிய குஜிலியம்பாறை வட்டாட்சியர் சென்னைக்கு பணியிட மாற்றம்
ஒப்பந்ததாரரின் ஆடியோ வெளியான நிலையில் வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட ரூ.33 லட்சம் டெண்டர் ரத்து
டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு புகார்: மேட்டூரில் 3 தனியார் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை