திருமலை: கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்திற்கும் அதிகமாக பக்தர்களின் கூட்டம் உள்ளது. அதுவும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், கூட்டம் மேலும் அதிகரித்தது.
இதனால் கோயிலுக்கு வெளியே சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர். கோடை காலத்தில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கடந்த மே 1-ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு விஐபி பிரேக் தரிசன முறையை தேவஸ்தான நிர்வாகத்தினர் முற்றிலுமாக ரத்து செய்தனர். எஸ்எஸ்டி (டோக்கன் உள்ள சர்வ தரிசனம்) 3 மணி நேரத்துக்குள்ளும், ரூ.300 சிறப்பு தரிசனம் இரண்டரை மணி நேரத்துக்குள்ளும் சுவாமியை தரிசித்து விடுகின்றனர்.
சாதாரண நாட்களில் தினமும் 65 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வர். ஆனால், தற்போது கடந்த 3 நாட்களில் மட்டுமே 2.45 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து உள்ளனர். இதனால் கடந்த 3 நாட்களில் மட்டுமே உண்டியல் மூலம் ரூ.11.95 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே 2ம் தேதி அதிகபட்சமாக 91,005 பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். மே 3ம் தேதி மட்டுமே உண்டியலில் ரூ.5.06 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரை பெருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கோலாகல தொடக்கம்
பழநி பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்