March 24, 2026

திருப்பதி செல்பவரா நீங்கள்? அப்போ இந்த ஜாக்பாட் நியூஸ் உங்களுக்குத்தான

திருமலை

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கியச் செய்தி என்னவென்றால், திருமலையில் உணவின் தரம் மற்றும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்த ஆந்திர முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார்.

பக்தர்களுக்கு வசதி:

பக்தர்கள் திருப்பதிக்கு வந்து தங்குமிடம், தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பும் வரை அனைத்து வசதிகளும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதில் ஆந்திர அரசு உறுதியாக உள்ளது. ரூ.30 கோடி மதிப்பில் ஆய்வகம் மற்றும் AI தொழில்நுட்ப வருகை, திருமலை பயணத்தை பக்தர்களுக்கு இன்னும் பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

திருப்பதியில் ஃபுட் அனாலிசிஸ் லேப்:

இந்தியாவிலேயே ஒரு கோவிலுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட முதல் அதிநவீன உணவுப் பரிசோதனை ஆய்வகத்தை (Food Analysis Lab) திருமலையில் ஆந்திர முதல்வர் (மார்ச் 21, 2026) திறந்து வைத்தார்.

ஆந்திர அரசு மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) இணைந்து சுமார் 30 கோடி ரூபாய் செலவில் இந்த லேப்பை உருவாக்கியுள்ளன. இதன்மூலம்  ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்படும் பிரசாதங்கள், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னப்பிரசாதம் மற்றும் லட்டு தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரத்தை உறுதி செய்யப்படும்.

திருப்பதி லட்டு /ஜலப்பிரசாதம் :

இந்த ஆய்வகத்தின் மூலம் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய், ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். மூலப்பொருட்களில் மைக்ரோ டாக்சின்கள் (Micro-toxins), தேவையற்ற வேதிப்பொருட்கள் அல்லது அமிலங்கள் கலந்துள்ளனவா என்பதைப் பரிசோதிக்கத் தனித்தனி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் ஜலப்பிரசாதம் (குடிநீர்) மற்றும் அன்னப்பிரசாதத்திற்குப் பயன்படுத்தப்படும் நீரில் உள்ள தாதுக்களின் (Minerals) அளவும் இங்கு துல்லியமாகப் பரிசோதிக்கப்படும்.

லேப் ரிப்போர்ட்டில் ‘தரம் உறுதி’ என்று சான்றிதழ் வந்த பிறகு மட்டுமே, அந்தப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

AI தொழில்நுட்பம் மூலம் விரைவான தரிசனம்

பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார். இதற்காக எத்தனை கோடி செலவானாலும் அரசு ஏற்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக டோக்கன் இல்லாமல் தர்ம தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வகையில் வரிசை மேலாண்மை (Queue Management) மாற்றியமைக்கப்பட உள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய அதிகாரி:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக (EO) அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஏற்கனவே நிதித்துறைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பதால், இனி வரும் காலங்களில் திருமலையின் நிர்வாகம் மற்றும் ஆன்லைன் சேவைகளில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

ஆன்லைன் புக்கிங் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு

தற்போது ஆன்லைன் புக்கிங்கில் பக்தர்கள் சந்திக்கும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் ‘எர்ரர்’ (Error) பிரச்சனைகளைச் சரிசெய்யப் புதிய திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

Spread the love