திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் – கோப்புப்படம்
சென்னையிலிருந்து இன்று காலை ரயில் மூலம் திருப்பத்தூர் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் பங்கேற்க சென்னை இரயில் நிலையத்திலிருந்து திருப்பத்தூருக்கு இன்று ரயில் மூலம் புறப்பட்டார்.
முன்னதாக, சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வரும் வழியில் மக்கள் பெரும் திரளாக வந்து மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே வழங்கியதற்கு நன்றி தெரிவித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், சென்னையில் இருந்து இன்று காலை ரயில் மூலம் திருப்பத்தூர் புறப்பட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவருக்கு அரக்கோணம் ரயில் நிலையத்திலும் ஏராளமான திமுக தொண்டர்கள் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின், ஜோலார்பேட்டையில் சாலையில் தன்னை வரவேற்கக் காத்திருந்த மக்களை நேரில் சந்தித்துப் பேசினார். வழிநெடுக, மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5000 வரவு வைக்கப்பட்டதற்கு, ஏராளமான பெண்கள் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

More Stories
இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டு கொளுத்தும் போராட்டம்: விவசாயிகளுக்கு பி.ஆர் பாண்டியன் அழைப்பு
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
பழனியில் அதிமுக கூட்டணி கட்சியினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்