August 10, 2026

திருப்பத்தூர் தெற்கு மாவட்டச் செயலாளராக திருப்பத்தூர் சட்டமன்ற எம் எல் ஏ டாக்டர் திருப்பதி

திருப்பத்தூர், ஆக. 10:

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தெற்கு மாவட்டச் செயலாளராக திருப்பத்தூர் சட்டமன்ற எம்.எல்.ஏ. டாக்டர் என். திருப்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் தெற்கு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மாவட்டக் கழக நிர்வாகிகள்:

மாவட்டக் கழகச் செயலாளர்: டாக்டர் என். திருப்பதி, எம்.எல்.ஏ.

இணைச் செயலாளர்: டி. சரஸ்வதி

பொருளாளர்: வி. அருணன்

துணைச் செயலாளர்: ஏ. சாமி

துணைச் செயலாளர்: வி. செல்வராஜ்

செயற்குழு உறுப்பினர்கள்:

ஏ. பாஸ்கர், கே. ராஜேஷ் குமார், கே. சரவணன், ஆர். தியாகராஜன், டி. சக்திவேல், டி. ஸ்ரீதரன், பி. உதயகுமார், எம். வினோத்குமார், ஆர். இம்ரான் கான், டி. சுதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து 09.08.2026 புதிதாக பொறுப்பேற்றுள்ள திருப்பத்தூர் சட்டமன்ற எம் எல் ஏ டாக்டர் திருப்பதியை கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து, மாலை அணிவித்து பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Spread the love