திருப்பூரை மையமாகக் கொண்ட இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோடை காலத்தை முன்னிட்டு இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள அலுவலகம் அருகில் தாகம் தீர்க்க தர்பூசணி பந்தல் இன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆதரவற்ற முதியோர்களை வரவழைத்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு ரிப்பன் வெட்டி தர்பூசணி பந்தலை திறந்து வைத்தனர். முன்னதாக திருநங்கைகள் அவர்களுக்கு பூத்தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் பொது மக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் உள்ளிட்ட பழ வகைகள் வழங்கப்பட்டது. பொதுமக்களும் ஆர்வமாக வந்து பழச்சாறு அருந்தி தாகத்தை தனித்தனர்.
இந்நிகழ்வில் இந்திரா சுந்தர தொண்டு நிறுவனர் இந்திரா, செயலாளர் ராஜா முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்