February 27, 2026

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே ஆய்வு

பிப் 26மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., திருப்பூர் நேதாஜி அப்பேரல் பூங்காவில் உள்ள ஆய்த்த ஆடை பூங்காவில் பின்னலாடை உற்பத்தி குறித்து செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்டார்கள். 

நேதாஜி அப்பேரல் பூங்கா என்பது தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள, ஜவுளித்துறையால் ஊக்குவிக்கப்பட்டு இயக்கப்படும் இந்தியாவின் முதல் மற்றும் தனித்துவமான 166 ஏக்கர் ஆடை பூங்கா ஆகும். இது பிப்ரவரி 2003-ல் நிறுவப்பட்டது, 53-க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி அலகுகளைக் கொண்டு, ஏற்றுமதி சார்ந்த ஜவுளி உற்பத்திக்குத் தேவையான நவீன வசதிகளுடன் செயல்படுகிறது. நேதாஜி அப்பேரல் பூங்காவில் 15,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர் பணிபுரிந்து வருகிறார்கள்.நேதாஜி அப்பரல் பூங்காவில் பெண்கள் ஸ்லிப், பெண்கள் வெஸ்ட், குரோச்செட் ஆடைகள், தட்டையான பின்னப்பட்ட ஆடை, பின்னப்பட்ட ஆடை · பின்னப்பட்ட பெண்கள் ஆடைகள், பின்னப்பட்ட ஆண்கள் ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் தயாரிக்கப்ப டுகிறது. மேலும், பயிற்சிமையம், கூட்டரங்கம், தொழிலாளர் நலவசதிகள், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகள் உள்ளிட்ட சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைந்துள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் திருப்பூர் நேதாஜி அப்பேரல் பூங்காவில் உள்ள ஆய்த்த ஆடை பூங்காவில் பின்னலாடை உற்பத்தி குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், திருப்பூர் நேதாஜி அப்பேரல் பூங்காவில் உள்ள ஆய்த்த ஆடை பூங்காவில் சோலார்மின் உற்பத்தி குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில், பொதுமேலாளர் (மாவட்டதொழில்மையம்) திரு.கார்த்திகைவாசன், நிர்வாகக்குழுத்தலைவர்.நேதாஜிஅப்பேரல்பூங்கா) .ஆர்.ராமு, இணை நிர்வாக இயக்குநர் (கே.என்.நிட்வேர்நிறுவனம்) திரு.விஷ்ணுபிரபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Spread the love