தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து மடல் வழங்கி காணொளிக் காட்சிகளைத் தொடர்ந்து வழங்கினார். மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து மடல் மருத்துவம் மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் முன்னிலையில் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணக்கர்களுக்கு வழங்கப்பட்டது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக்குமரன் இ.ஆ.ப., அவர்கள், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.பாலமுருகன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வி.சத்தியபாமா, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்.க.ராம்குமார். துணை மேயர்.ரா.பாலசுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாநகராட்சி ஆணையாளர் .எம்.பி.அமித் இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி புனிதா அந்தோணியம்மாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
திருப்பூர்

More Stories
14-11-2026
பொருளூர் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் கழிவு தணிக்கை!
14-11-2026