தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரப்புரையின் போது புதுமண தம்பதிகளை வாகனத்தில் ஏற்றி வாழ்த்திய சம்பவம் கவனத்தை வைத்துள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வண்டலூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் பொன்னேரி ரவி, கும்மிடிப்பூண்டி விஜயகுமார் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் தவெக தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்ந்து விஜய் -ரோடு ஷோ மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக புதுமண தம்பதிகள் இருவர் விஜயின் பிரச்சார வாகனத்தை அணுகினர். அவர்களை வாகனத்திற்கு உள்ளே அழைத்து விஜய் வாழ்த்துக் கூறிய சம்பவம் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழக பிரச்சார களம்!
தமிழக பிரச்சார களம் நான்கு நாளுக்கு நாள் ருசிகரமான சம்பவங்களை எதிர்கொண்டு வருகிறது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஜனநாயக திருவிழாவில் தங்களை ஆளப்போகும் ஆட்சியாளர்களை மக்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். முற்போக்கான மாநிலமாக கருதப்படும் தமிழகத்தின் மிக முக்கியமான சட்டமன்றத் தேர்தலாக 2026 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அமையவிருக்கிறது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு நான்கு முனைப்போட்டி தமிழக தேர்தல் களத்தில் வலுத்து உள்ளது. பிராந்திய கட்சிகளாக இருக்கக்கூடிய திமுக மற்றும் அதிமுக இடையே ஒரே போட்டியாக நீடித்து வந்த நாம் தமிழர் கட்சியை ஓரங்கட்டி தவெக முன்னேறி வருகிறது.
சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகளில் திமுக 36 சதவீத வாக்குகளையும் அதிமுக 33 சதவீத வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி மூன்று சதவீத வாக்குகளை பெரும் என சொல்லப்பட்ட நிலையில் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் உருவாகுமோ என்ற சூழல் நிலவி வருகிறது.
தொங்கு சட்டமன்றத்தை உருவாக்குவாரா விஜய்!
விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2021 சட்டமன்ற விடுதலைப் போல 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு கேக் வாக்காக இருந்த தேர்தல் தற்போது கடினமாக மாறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் விஜய்க்கு 24 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்ற பேச்சுக்கள் தொங்கு சட்டமன்றத்திற்கு வழிவகுமா என்ற கேள்வியையும் உருவாக்கி இருக்கிறது.
தொங்கு சட்டம் என்பது எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போவதாகும். ஒருவேளை வருகிற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிற கட்சிகள் கூட்டணி அமைத்து பெரும்பான்மை நிரூபித்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை முடிவு செய்யும். ஒருவேளை விஜய் அம்சத்தால் அதிமுக அதிமுக கூட்டணியில் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் உருவானால் விஜய் தான் கிங் மேக்கர் ஆவார் என் சொல்லப்படுகிறது.

More Stories
எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் ரஜினி ரசிகர்கள் ஆதரவு..அதிமுகவை வெற்றிபெற வைப்போம் என பேச்சு
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்றதும் அமலுக்கு வரும் விதிமுறைகள் என்னென்ன?
திருச்சி பரப்புரையால் கிளம்பிய சர்ச்சை.. தவெக விஜய் மீது வழக்குப்பதிய வேண்டும்.. சிபிஎம் சண்முகம் அதிரடி