திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7-ஆம் நாள் உற்சவத்தில், முதல் தேராக விநாயகர் தேரோட்டம் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முதல் தேர் புறப்பாடு: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வில் முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு மாட வீதிகளில் வலம் வந்தது. இத்திருவிழா கடந்த 15 -ம் தேதி அண்ணாமலையார் திருக்கோயில் சன்னதியில் 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன்.கோலாகலமாக தொடங்கி தொடர்ந்து காலை மாலை இருவேளைகளிலும் அண்ணாமலையார் , உண்ணாமலை அம்மன் பல்வேறு வாகனங்களில் வீடுகளில் எழுந்தருளி பக்கதர்களுக்கு அருள்பலித்து வந்துருகிறார்கள். இன்று ஏழாவது திருநாள் என்று கருதக்கூடிய முக்கியமான திருவிழாவில் ஒன்று தேரோட்டம் ,பஞ்சமூர்த்திகளுக்கும் அதாவது ,முருகர் ,அண்ணாமலையார் விநாயகர், உண்ணாமலை அம்மன் ,பராசக்தி அம்மன்,தண்டிகேஷ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கும் திருக்கல்யாணம் மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ,அபிஷேகங்கள் செய்யப்பட்டு ராஜா அலங்காரத்தில் காலையிலேயே அவர்களுக்காக தனித்தனியான தேரிலே தற்போது எழுந்தருளி காட்சி அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது விநாயகர் தேரோட்டமானது திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கி வளம் கொண்டிருக்கிறார். திருக்கோவயில் இணை ஆணையர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த தேரோட்டத்தினை வடம் பிடித்து தேரை இழுத்து தற்போது தேரானது மட வீதியில் வளம் வந்து கொண்டிருக்கிறது .
பக்கதர்களுடைய எண்ணிக்கை என்பது கூடிக்கொண்டே இருக்கிறது அதாவது எங்கு பார்த்தாலும் மக்களுடைய வெள்ளமாகவே ,தலைகளாகவே காட்சிஅளித்து கொண்டிருக்கிறது. முருகர் தேர்,அதாவது விநாயகர் தேர் தற்போது மட வீதியில் வளம் வந்து நிலையை அறிந்தவுடன் தொடர்ந்து முருகர் தேரும் அதனை தொடர்ந்து இன்றைய தினம் அண்ணாமலையார் மற்றும் உண்ணமலை அம்மன் மட விதிகளில் வளம் வரக்கூடிய பெரிய தேர் என்று கருதக்கூடிய அந்த பஞ்சமூர்த்திகள் தேர் அதனை தொடர்ந்து பெண்கள் மட்டுமே இழுக்க கூடிய ,பராசக்தி அம்மன் தேரும் சிறுவர்கள் மட்டும் இழுத்து செல்ல கூடிய அந்த தண்டிகேஸ்வரர் தேரும் இன்று திருவண்ணாமலை மாட வீதியில் வளம் வரும் அதாவது எந்த ஒரு ஊரிலும் இல்லாத அளவிற்கு திருவண்ணாமலையில் பொறுத்தவரை ஒரே நாளில் தேரோட்டம் என்பது திருவண்ணாமலையில் மட்டும் தான் .
தற்போது விநாயகர் தேரானது தெடர்ந்து நடைபெற்று வருகிறது . இதற்காக வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 4500 போலீசார் இன்றைய தினம் தேர் திருவிழாவிற்காக ஈடுபட்டுள்ளார்கள் தொடர்ந்து திருவண்ணமலை மட வீதி முழுக்க 200-க்கு மேற்பட்ட ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்

More Stories
ஜாதகத்தின் 10ஆம் வீடு. :தொழில் பலன்?
திருப்பரங்குன்றத்தில் சிறிய வைரத் தேரோட்டம்!
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்: இன்று மாலை மகா தீபம்